மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னதுரையின் மகன் சின்ராசு (வயது 28). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம், காசிபாளையம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த குப்புசாமியின் மகன் ஆனந்த் (29), ரவிச்சந்திரன் மகன் அஜித் (27) ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து பெரம்பலூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டினார். துறையூர்-பெரம்பலூர் சாலையில் அடைக்கம்பட்டியில் டி.களத்தூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, அஜித்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அந்த வழியாக நடந்து சென்ற அடைக்கம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (37) என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திக், சின்ராசு ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனந்த், அஜித் ஆகியோர் காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ராசு உயிரிழந்தார். கார்த்திக் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com