கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

 கரூர் பெரியகோதூர் பகுதி வி.வி.ஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 27). கொத்தனார். இவருக்கு ரம்யா (25) என்ற மனைவியும், அன்பில் இனியன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் பாலசுப்பிரமணியன் கடந்த ஒரு மாதமாக உப்பிடமங்கலம் அருகே உள்ள பழைய ரெங்கபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து உறவினரின் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் பாலசுப்பிரமணியன் அடிக்கடி தனது மனைவியுடன் குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com