

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி மேற்கு காலனியை சேர்ந்தவர் முருகசாமி (வயது 32). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது முருகசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.