கொத்தனார் தற்கொலை

சேலத்தில் கொத்தனார் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார் தற்கொலை
Published on

சூரமங்கலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32), கொத்தனார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இதனால் மனமுடைந்த முருகன், கடந்த 19-ந் தேதி, வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். இந்த தற்கொலை தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com