கொத்தனார் தற்கொலை

திருச்சுழி அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார் தற்கொலை
Published on

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கொத்தனார். இவர் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோது தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்து வந்ததால் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து உடனே அவருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com