திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

குடோன்களில் பனியன் வேஸ்ட் துணிகள் மற்றும் பழைய அட்டைகள் அதிகளவில் இருந்ததால், தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த 6-க்கும் மேற்பட்ட குடோன்களுக்கும் தீ வேகமாக பரவியது. குடோன்களில் பனியன் வேஸ்ட் துணிகள் மற்றும் பழைய அட்டைகள் அதிகளவில் இருந்ததால், தீ கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்களில் சென்று, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com