10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்கூனவேலம்பட்டி புதூர் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்கூனவேலம்பட்டி புதூர் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
Published on

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள கூன வேலம்பட்டி புதூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி ஹரிணி 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி காவியா 471 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், மாணவி இனிகா 448 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற செய்தமைக்காக தலைமை ஆசிரியர் கலியபெருமாள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com