தவறான ஆலோசனைகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் - மருத்துவர் சர்மிகா விளக்கமளிக்க அவகாசம் நீட்டிப்பு

இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மேலும் அவகாசம் கோரியதை அடுத்து வரும் 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தவறான ஆலோசனைகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் - மருத்துவர் சர்மிகா விளக்கமளிக்க அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும்' என்பன போன்ற பல கருத்துகளை மருத்துவர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து சித்த மருத்துவ கவுன்சிலில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த ஷர்மிகாவிடம் பிப்ரவரி 10-ந்தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில்,மேலும் அவகாசம் கோரியதை அடுத்து வரும் 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com