பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் விவகாரம்; பேராசிரியர்கள் போராட்டம்

முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பேராசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் விவகாரம்; பேராசிரியர்கள் போராட்டம்
Published on

சேலம்,

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள், ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பேது துணைவேந்தர் ஜெகநாதனை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

அரசு இரண்டு முறை ஆதாரங்களுடன் உத்தரவு கடிதம் அனுப்பியும், முறைகேடு புகாரில் சிக்கிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர்கள், பதிவாளரை காப்பாற்ற துடிக்கும் துணை வேந்தர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com