மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள்: தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
Published on

சென்னை,

இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com