உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கப்பல் மோதல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானார்கள். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் உயிரிழந்திருப்பது தமிழக மீனவக்குடும்பங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதம் இனியும் தொடரக்கூடாது என்பதற்காக இலங்கை அரசிடம் மத்திய அரசு கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் உயிரிழந்த தமிழக மீனவரின் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு உயிரிழந்த தமிழக மீனவரின் குடும்பத்துக்கு இலங்கை அரசிடம் இருந்து அதிகபட்ச இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com