

சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நண்பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையில் இன்று சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கள், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக் நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ, நந்தனத்தில் 12 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது .சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.