எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடரட்டும்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து

விண்வெளியில் விரியும் நம் தேசத்தின் பெருமை கண்டு என்றும் பெருமிதம் கொள்கிறோம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடரட்டும்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து
Published on

சென்னை,

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

மாணிக்கம் தாகூர் வாழ்த்து

18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் இமைக்காத கண்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நமது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிகு மைந்தர், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் அவர்களின் தலைமையின் கீழ் இந்திய விண்வெளித் துறை புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது.

விஞ்ஞானிகள் அழைக்கும் "The Eye in the sky" இது. தேசப் பாதுகாப்பிற்காக ‘ஒருபோதும் இமைக்காத கண்" என்பேன்.

இது போன்ற எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடர வாழ்த்துகள்;விண்வெளியில் விரியும் நம் தேசத்தின் பெருமை கண்டு என்றும் பெருமிதம் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com