மே தினம்: நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்

உழைப்பாளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
மே தினம்: நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு (மே தினம்), நாளை (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை (1-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்டிரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை -தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com