"தீபாவளி திருநாள் வெற்றியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் " - கே.எஸ்.அழகிரி வாழ்த்து

நவீன நரகாசுரனுக்கும் முடிவு கட்டும் நன்னாளாக இந்த தீபாவளி அமையட்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
"தீபாவளி திருநாள் வெற்றியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் " - கே.எஸ்.அழகிரி வாழ்த்து
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கால விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும், மக்கள் உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் தீபாவளி வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது;-

"அறியாமை எனும் இருளைப் போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் இந்த தீபாவளி திருநாள் கொண்டு வரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்த நன்னாள் வழங்கட்டும்.

கொரோனா, பொருளாதாரச் சீரழிவு, வேலையிழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என பல மக்கள் விரோத நடவடிக்கைகளினால் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கும் முடிவு கட்டும் நன்னாளாக இந்த தீபாவளி அமையட்டும்.

தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com