மக்களின் இல்லங்களில் இன்பம் செழிக்கட்டும்: டிடிவி தினகரன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் இருள் விலக வேண்டும் என டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை ,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் இருள் விலகி அவர்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைப்பதோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாகவும் இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்.
மலரும் இந்த தமிழ்ப் புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையும், இன்பமும் செழிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு மீண்டும் ஒருமுறை எனது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story






