உலகெங்கும் வெறுப்பு நீங்கி நல்லிணக்கம் செழிக்கட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு 3-வது நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதன் நினைவாக இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கேலாகலமாக கெண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் திருச்சியில் உள்ள உலக மீட்பர் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்! உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்! அன்பே வெல்லட்டும். உலகை ஆளட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com