வெற்றியும் வளமும் பெருகட்டும்; விஜயதசமி வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
வெற்றியும் வளமும் பெருகட்டும்; விஜயதசமி வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
Published on: 

சென்னை,

விஜயதசமி திருநாளை முன்னிட்டு, வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். புதிய முயற்சிகள் வெற்றிபெறவும், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும். அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com