

சென்னை,
தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;
”நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன். அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம் என கூறியுள்ளார்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.