

சென்னை,
பெண் குழந்தைகளின் கனவுகள் நனவாகட்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மழலையின் புன்னகையில் மகிழ்ச்சியையும், அவர்களின் கனவுகளில் நாளைய உலகின் நம்பிக்கையையும் சுமந்து வரும் தேவதைகள் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உலக பெண் குழந்தைகள் தினமான இன்று, எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு பெண் குழந்தையும் அச்சமின்றி வாழவும், தடைகளின்றிக் கல்வி கற்கவும், தன்னம்பிக்கையுடன் கனவு காணவும், தனது கனவுகளை நனவாக்கவும் வாய்ப்புகளை உருவாக்கித் தர இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.