தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறக்கட்டும் - அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பா.ஜ.க. சார்பாக, இனிய 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த பாரம்பரியமும், கலாச்சாரமும், செழுமையும், வளமும் நிறைந்த தமிழகம் தற்போது, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெருகி வரும் போதைப்பொருள்கள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி என, இருள் சூழ்ந்து இருப்பதைப் பார்க்கிறோம்.

வரும் 2025-ம் ஆண்டு, தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறந்திடவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com