பாவேந்தரின் திண்மை நிறை தமிழ் ஒளியென நம் இனத்திற்கு துணை நிற்கட்டும்: மு.க.ஸ்டாலின்

பாரதிதாசன் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ் ஒளியென நம் இனத்திற்கு துணை நிற்கட்டும்: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

"புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே. தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்கு துணை நிற்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com