

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் #HBDVijay ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணாமலை அவர்கள் முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.