மயிலாடுதுறை: 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் குறியீடு காட்சிப்படுத்தப்பட்டது.
மயிலாடுதுறை: 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் குறியீடு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரையா, வட்டாட்சியர் (தேர்தல்) ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com