மயிலாடுதுறையில் பரபரப்பு: கவர்னருக்கு எதிராக போராட்டம்...காங்கிரஸ் - திமுக மோதல்

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததால் திமுக கடும் அதிருப்தியில் உள்ளது.
மயிலாடுதுறையில் பரபரப்பு: கவர்னருக்கு எதிராக போராட்டம்...காங்கிரஸ் - திமுக மோதல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக திமுகவுடன் காங்கிரஸ் பயணித்து வந்தது. இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தது. ஆனால், திமுக ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, விஜய் கூட போயிடலாம் என்று 2ம் கட்ட நிர்வாகிகள் பேச தொடங்கினர். அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஷயத்தை மூத்த சீனியர்கள் மும்முரமாக முன்வைத்திருந்தனர். எனவே தொடக்கம் முதல் காங்கிரஸ்-திமுக இடையே உரசல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே விஜய் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருந்தது. இது திமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், விஜய்யை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கவில்லை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நடந்த போராட்டத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்து உள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், விஜய்யை முதல்-அமைச்சராக்க கவர்னர் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இப்படி இருக்கையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அப்போது போராட்டத்திற்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சியினரை சரமாறியாக தாக்கி உள்ளனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com