மயிலாடுதுறை: வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் - கிராம உதவியாளர் கைது

வண்டல் மண் எடுக்கச்செல்ல ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்துள்ளார்.
மயிலாடுதுறை: வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் - கிராம உதவியாளர் கைது
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

கிராம உதவியாளர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச்செல்ல வட்டாட்சியர் பெயரை சொல்லி கிராம உதவியாளர் முகமது என்பவர் ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்துள்ளார். இது குறித்து அறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராம உதவியாளர் முகமதுவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com