'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் நாளை மக்களை சந்திக்கிறார்

மக்களின் குறைகளை விரைவில் தீர்ப்பதற்காக புதிய திட்டம் .
'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் நாளை மக்களை சந்திக்கிறார்
Published on

சென்னை மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 3-ந்தேதி வடசென்னையில் இத்திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட எல்.பி.சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுகிறார்.

எனவே, மண்டலம் 13-க்கு உட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com