யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இருவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டினார் மேயர் பிரியா

இருவருக்கும் பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசினை மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இருவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டினார் மேயர் பிரியா
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மேயர் ஆர். பிரியா, இன்று (12.03.2026) ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஏ. பூஜா மற்றும் மடுவின்கரை மாநகராட்சியின் சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் சந்திராவின் மகளான எம். கிருத்திகா ஆகிய இருவரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இருவருக்கும் பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com