சென்னை மாநகராட்சிக்கு 23 வாகனங்கள் பயன்பாட்டை தொடங்கி வைத்த மேயர் பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடும் வகையில் சூரிய காந்தி விதைகள் நடும் பணியினை மேயர் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்கு 23 வாகனங்கள் பயன்பாட்டை தொடங்கி வைத்த மேயர் பிரியா
Published on

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்களில் கழிவு செய்யும் நிலையில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும், ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் 8 எண்ணிக்கையிலான கால்நடைகளை பிடிக்கும் புதிய வாகனங்களும், பெருநிறுவனங்களின் சமூக பங்காற்றும் நிதியின் கீழ் அண்ணாநகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிக்காக எச்.டி.எப்.சி. வங்கியின் சார்பில் 10 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் மற்றும் பெடரல் வங்கியின் சார்பில் 5 மூன்று சக்கர மின்கல வாகனங்ளும் என மொத்தம் 23 வாகனங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடும் வகையிலும் அழகுபடுத்திடும் வகையிலும் தன்னார்வலர்கள் மூலமாக சூரிய காந்தி விதைகள் நடும் பணியினை மேயர் தொடங்கி வைத்தார்.

Also Read
குஜராத்: திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து - 5 பேர் பலி; 6 பேர் காயம்
சென்னை மாநகராட்சிக்கு 23 வாகனங்கள் பயன்பாட்டை தொடங்கி வைத்த மேயர் பிரியா

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழு தலைவர் (கல்வி) த.விசுவநாதன், எச்.டி.எப்.சி. வங்கி தமிழ்நாடு தலைவர் பிரேம் ஆனந்த், மண்டல தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com