எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ந்தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இந்த பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும். இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்புள்ள தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு நாளை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com