ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் காசிராஜன், மாவட்ட பொருளாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், அரசியல் ஆலோசனை குழு செயலாளர் ரவிச்சந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் கல்லத்தியான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் மதுரை திறந்தவெளி மாநாட்டில் 150 வாகனங்களில் 3000 பேர் கலந்து கொள்ள வேண்டும். தமிழக கவர்னர் ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி ம.தி.மு.க. நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி வருகிற 30-ந் தேதிக்குள் தென்காசி வடக்கு மாவட்டத்தில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களை பெற்று வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com