

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. அந்த கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மதிமுக தோல்வியடைந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரியில் உள்ள மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.