மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை


மதிமுக எம்.எல்.ஏ சதன்  திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Dec 2025 5:45 PM IST (Updated: 30 Dec 2025 5:49 PM IST)
t-max-icont-min-icon

2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம்.எல்.ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

சென்னை,

வாசுதேவநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் நிதி நிறுவனம் ஒன்றில் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1 கோடியை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தாவிட்டால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story