ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு

நெல்லை கலெக்டரிடம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு கொடுத்தார்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு
Published on

நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, 'நான் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். 2022-23-ம் ஆண்டு வளர்ச்சி பணிக்கான டெண்டரை நான் குறைந்த விலைக்கு கேட்டு இருந்தேன். ஆனால் எனக்கு கொடுக்காமல் வேறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நான் ம.தி.மு.க.வை சேர்ந்தவன் என்பதால் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். இந்த டெண்டர் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com