ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

பாவூர்சத்திரத்தில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராம.உதயசூரியன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மணிமாறன், தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்வள்ளுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com