ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
Published on

கோவில்பட்டி:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுக்கும், சட்டமன்ற செயல்பாட்டுக்கும் முட்டுக் கட்டை போடும் தமிழக கவர்னர் ஆர். என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் பேச்சிராஜ் தலைமை தாங்கினார். முதல் கையெழுத்தை போட்டு துணை பொது செயலாளர் தி.மு.

ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர செயலாளர் பால்ராஜ், கூட்டணி கட்சிகளான திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர துணை தலைவர் காளியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் சரோஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கையெழுத்து போட்டனர்.இதனைத் தொடர்ந்து மதிமுக ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவ நாரா யணன், மாரிசாமி ஆகியோர் ஏற்பட்டில் இனாம் மணியாச்சி சந்திப்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு துணை பொது செயலாளர் தலைமை தாங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com