கீழக்கரையில் குழந்தைகளை தாக்கும் தட்டம்மை நோய்

கீழக்கரையில் குழந்தைகளை தாக்கும் தட்டம்மை நோயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கீழக்கரையில் குழந்தைகளை தாக்கும் தட்டம்மை நோய்
Published on

கீழக்கரை,

கீழக்கரையில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர்களை ருபெல்லா வைரஸ்(தட்டம்மை நோய்) தாக்கி இருந்தது தெரிய வந்தது. தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறுகையில், தற்போது கீழக்கரையில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. 2 மாதத்திற்குள் இதுவரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள்ளது.

தட்டம்மையை ஒழிப்பதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி 9 மாதம் முதல் 15 மாதம் வரை குழந்தைகளுக்கு அந்தந்த தெருக்களிலும் வீதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து ருபெல்லா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வந்தது. மேலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்தும் வழிமுறைகளும் உள்ளது.இந்த தடுப்பு ஊசியினை இதுவரை கீழக்கரையில் 48 சதவீத குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள்.

மேலும் ருபெல்லா வைரஸ் என்பது கரு தரிக்கும் போது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எத்தனை குழந்தைகள் இதுவரை ருபெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அரசு தரப்பில் கீழக்கரை முழுவதும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com