

வாலாஜா ஒன்றியம், வானாபாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். வானாபாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் உதயசங்கர், கால்நடை மருத்துவர்கள் மங்கையர்க்கரசி, கோபிநாத், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.