சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 16) பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவுப்படி மூடப்படும். எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com