மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

களக்காடு அருகே மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் வேலு மகன் அருணாச்சல பாண்டி (வயது 40), மெக்கானிக். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை குடும்பத்தினர் கண்டித்தனர். இதையடுத்து வாழ்க்கையில் வெறுப்படைந்த அருணாச்சல பாண்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com