பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மெக்கானிக் சைக்கிள் பயணம்

பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மெக்கானிக் சைக்கிள் பயணம் வந்தார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மெக்கானிக் சைக்கிள் பயணம்
Published on

தமிழ்நாட்டில் பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி குளித்தலையை சேர்ந்த ரேடியோ மெக்கானிக் குளித்தலை காந்தி சிலையில் இருந்து திருச்சியில் உள்ள அண்ணாசிலை வரை சைக்கிள் பயணம் சல்ல முடிவு சய்தார். அதன்படி குளித்தலையில் நேற்று தனது சைக்கிள் பயணத்தைதொடர்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தற்போது உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் தற்போது வரை பஸ் கட்டணம் குறைக்கப்படவில்லை.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாரத்தில் திங்கட்கிழமை தோறும் குளித்தலை காந்தி சிலையில் இருந்து திருச்சியில் உள்ள அண்ணா சிலை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளேன், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com