ஆட்டோ மோதி மெக்கானிக் பலி

பணகுடி அருகே ஆட்டோ மோதி மெக்கானிக் பலியானார்.
ஆட்டோ மோதி மெக்கானிக் பலி
Published on

பணகுடி:

நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 19). மோட்டார் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் காவல்கிணறு மெயின் ரோட்டில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ, சக்திவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com