

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டு செல்ல இருந்தது. விமானத்தில் 310 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 322 பேர் பயணம் செய்ய தயாராக இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும் விமானத் தின் கதவுகள் மூடப்பட்டன.
விமானம் ஓடுபாதைக்கு செல்லும் முன்பு, விமானி இறுதிக்கட்ட சோதனை செய்தார். அப்போது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார். இதே நிலையில் விமானத்தை வானில் பறக்க செய் வது பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமானம், தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட் டது. விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்தில் ஏறி எந்திரக்கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விமானத்தில் இருந்த பயணிகள், கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் விமானத்தில் ஏறட்ட பழுதை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஒட்டல்களில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விமானம் பழுது பார்க்கப்பட்ட பிறகு மீண்டும் சிங்ப்பூருக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட எந்திரக்கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உரிய நடவடிக்கையின் காரணமாக, விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் விமானத்தில் செல்ல இருந்த 322 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.