வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கண்ணாமூச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
Published on

மேட்டூர்

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கண்ணாமூச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா தலைமை தாங்கினார். மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு இதய பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாரப்பன், நகர பா.ம.க. செயலாளர் கோவிந்தராஜ், வீரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com