கந்தபாளையத்தில் மருத்துவ முகாம்

கந்தபாளையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கந்தபாளையத்தில் மருத்துவ முகாம்
Published on

நொய்யல் அருகே உள்ள கந்தம்பாளையம் காலனி சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றனர்.பின்னர் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரகளை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com