தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்காக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், அப்பல்லோ மருத்துவமனை இணைந்து முழு உடல் பரிசோதனை முகாமை நேற்று முதல் வரும் 27-ந்தேதி வரை நடத்துகிறது.

இந்த மருத்துவ முகாமினை சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளையும் அவர் பார்வையிட்டார்.

5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

இப்பரிசோதனை முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், இருதய பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், எக்கோ போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் ச.உமா, அப்பல்லோ மருத்துவமனை குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி மற்றும் தமிழ்நாடு தலைமை செயலக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com