தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை
Published on

ராணிப்பேட்டை சிப்காட்டில் செயல்பட்டு வரும் அல்ட்ராமரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் அரசு பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 369 ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தொழிற்சாலை வளாகத்தில் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கபிலன், சுபாஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) அண்ணாமலை மற்றும் மருத்துவ குழுவினரும், நிர்வாகம் சார்பில் விஜயகுமார், ராஜசேகர், கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com