காகித ஆலை சார்பில் மருத்துவ முகாம்

புகழூர் காகித ஆலை சார்பில் மருத்துவ முகாம் நடக்கிறது.
காகித ஆலை சார்பில் மருத்துவ முகாம்
Published on

புகழூர் காகித ஆலை சார்பில் மருத்துவ முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கிறது. அதன்படி ஓனவாக்கல்மேட்டில் காலை 8 மணிக்கும், நாணப்பரப்பில் காலை 8.45 மணிக்கும், கந்தசாமிபாளையத்தில் காலை 9.30 மணிக்கும், நல்லியாம்பாளையத்தில் காலை 10 மணிக்கும், சொட்டையூரில் காலை 10.30 மணிக்கும், மூலிமங்கலத்தில் காலை 11 மணிக்கும், பழமாபுரத்தில் காலை 11.45 மணிக்கும், மசக்கவுண்டன்புதூரில் 12.30 மணிக்கும், குறுக்குபாளையத்தில்1 மணிக்கும் நடைபெறுகிறது. முகாமில் காகித ஆலை டாக்டர்கள் ராஜலட்சுமி, சுகந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com