

திருவள்ளூர்,
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ஆஷெர் இம்மானுவேல் (20). இவர் திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வகுப்பு முடிந்து கீழே இறங்கும்போது 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த மாணவனை உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாணவனின் தந்தை ரகு திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் இறந்த மாணவர் ஆஷெர் இம்மானுவேல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது பேக் ஐடி மூலம் யாரோ ஒருவர் தவறான மெசேஜ்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். அது ஆசர் இமானுவேலுக்கும் அந்த கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்களும் இடையே தகராறு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அந்த ஃபேக் ஐடியை பயன்படுத்தியதாக கூறி ஆசர் இமானு வேலுக்கும் கல்லூரியில் படிக்கும் சக நாலு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்களுடன் பயிலும் நான்கு கல்லூரி மாணவர்களும் அவரை வகுப்பறையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கல்லூரியின் 5வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தன் மகனின் இறப்பிற்கு காரணமான மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் தந்தை ரகு திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த தகராறு காரணமாக ஐந்தாவது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.