தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

போளூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
Published on

போளூர்

போளூர் பேரூராட்சியும் களம்பூர் வட்டார மருத்துவமனையும் இணைந்து போளூர் பேரூராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடந்தது.

செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாந்தி நடராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சியின் தலைமை எழுத்தர் முகமது ஈசாக் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் 200 பேர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, உடல் எடை, கொழுப்புச்சத்து ஆகியவை குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் உறுப்பினர்கள் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், களம்பூர் வட்டார மருத்துவமனை டாக்டர்கள் ஜெகன், கார்த்தி, தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தூய்மை பணி ஆய்வாளர் சோமு நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com